25 ஜூலை, 2012

கலக்கல் காலேஜ் டேஸ்


கலக்கல் காலேஜ் டேஸ்..
2003 ,, 3rd Semster Study Holidays
NEC - Hostel -01 Room No 107
பொதுவாக எங்கள் ஆஸ்டல் மெஸ்ஸில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை காலை உணவாக தோசை இருக்கும்.
அதிலும் சனிகிழமை  காலை ஸ்பெசல் தோசை (கொஞ்சம் மொருமொருவென்று இருக்கும்) + மதியம் பிரியாணி வேற..
சனிக்கிழமை பெரும்பாலும் கல்லூரி இல்லாத காரணத்தினால் வெள்ளிகிழமை இரவு தூங்க நெடுநேரம் ஆகிவிடும்.
சனி கிழமை காலை தோசை என்பதால் கொஞ்சம் லேட்டா மெஸ்க்கு போனால் வெகுநேரம் காத்திருக்க வேண்டி இருக்கும்,
ஸ்பெசல் தோசை என்பதால் சுடுவதற்கு சற்று நேரம் ஆகும்.
சாப்பிடுற நம்ம மக்களோ அவ்ளோ சீக்கிரம் எந்திரிக்க மாட்டாங்க..
மினிமம் ஒரு அல்லது இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

நேரம் ஆக ஆக தோசையின் சைஸ் சுருங்கி கொண்டே வரும்..
10 மணிக்கு மேல் அது கல் தோசையாக மாறி விடும்..

கமிங் டு தி பாயின்ட் யுவர் ஆனார்..

அது மூணாவது செமஸ்டர் பரீட்சைக்கான "Study Holidays"..

இரண்டு மூன்று வாரங்கள் ஆஸ்டலில் படிப்பது (படிப்பதாய் நடிப்பது ) மட்டுமே வேலை.
பகல் நேரங்களில் சாப்பிடுவது, தூங்குவது என்று இருந்து விட்டு, இரவு நேரங்களில் மட்டும் சிறிதாய் படிப்போம்.
அதுவும் பல நேரங்களில் அரட்டைகளில் கடந்துவிடும்.

அது ஒரு சரித்திர புகழ் வாய்ந்த வெள்ளிகிழமை இரவு.

நானும் Sweety ரவியும் அன்று இரவு நெடு நேரம் வரண்டாவில் அமர்ந்து படித்து கொண்டிருந்தோம். இடை இடையே பேச்சுகளுடன்..

மணி இரண்டானது...ஆஸ்டலில் எல்லோரும் தூங்கி விட்டனர்.
எங்களுக்கும் தூக்கம் வந்துவிட்டது.
தூங்கலாம் என்ற போது திடிரென ஒரு எண்ணம் உதயமானது..

நான் ரவியிடம்,

" விடிவதற்கு இன்னும் 4 மணி நேரம் தான் இருக்கு.
நாளைக்கு சனி கிழமை, ஸ்பெசல் தோசை வேற,எப்டியும் நாம எந்திரிக்க எட்டு மணி ஆயிடும். அப்போ மெஸ்க்கு போன கூட்டம் அதிகமா இருக்கும். சாப்பிட கொறஞ்சது ஒன்றை மணி நேரமாவது வெயிட் பண்ணனும். சாப்பிட்டு வெளில வர 10 மணி ஆயிடும்,அப்டின மதியம் பிரியாணி நல்ல சாப்பிட முடியாது,அதனால இன்னும் ஒரு 4 மணி நேரம் அப்பிடியே படிச்சுட்டு ஆறு மணிக்கு நேர மெஸ் க்கு போன சூடா ஸ்பெசல் தோசை சாப்பிட்டுவிட்டு வந்து தூங்கிறலாம்.. அப்புறம் 12 மணிக்கு போய் பிரியாணி சாப்பிட வசதியா இருக்கும். நீ என்ன சொல்ற?

மூச்சு விடாமல் நான் பேசியதை அமைதியாக கேட்டு கொண்டிருந்த ரவி, பேசி முடித்ததும் என்னை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தான் (கொஞ்சம் கேவலமா பார்வை அது)
உடனே சிரித்து கொண்டே, "சூப்பர் யோசனை டா, சூடா ஸ்பெசல் தோசை சாப்பிட்டு விட்டு, அப்புறமா ரெஸ்ட் எடுத்திட்டு மதியம் பிரியாணிய ஒரு வெட்டு வெட்டலாம் என்று ஆர்கிமிடிஸ் தனது தத்துவத்தை கண்ட போது கொண்ட அதே குதுகலத்துடன் சொன்னான்.


அப்புறம் என்ன ஒரு இரண்டு மணிநேரம் கொஞ்சம் படித்து விட்டு, அஞ்சு மணிக்கு பல் துலக்கி + மேற்படி சமாச்சரங்களை முடித்து விட்டு, சரியாக ஆறு மணிக்கு மெஸ் கதவை தட்டினோம்..

மெஸ் பாய் வந்து கதவை திறந்தான்.
எங்களை ஏற இறங்க பார்த்து விட்டு, என்ன சார் என்றான்,
தோசை ரெடியா டா.. என்றோம்.

ஒரு மாதிரி பார்த்து விட்டு, இப்ப தான் கல்லை அடுப்புல வைச்சுருக்கு.. டீ வேணா குடிங்க.. என்று சொல்லி உள்ளே சென்றான்.

இதற்கு இடையில் மெஸ் கதவு திறந்ததும், ஒரு ஜீவன் வேகமா வந்து எங்களுடன் சேர்ந்தது. யாருன்னு பார்த்தா நம்ம பீர் முகமது.. (நம்ம மாதிரி ஊருக்குள்ள கொள்ள பேரு இருப்பான் போல)

ஆச்சு.. நாங்க மூணு பேரும் மொத டேபிளில் உகார்ந்தோம்..

6.15 A.m,
முதல் 3 தோசை சும்மா முறுகல, சூடா, கும்முன்னு வந்துச்சு.. தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, பாசி பாருப்பு சம்பார்.
நானும் ரவியும் வெளுத்து கட்ட ஆரம்பித்தோம்.
மூன்று, ஐந்து, எட்டு....

இதற்குள் மணி 7 ஆனது.. மெஸ் நிரம்பி விட்டது.. எங்களுக்கு பின் வந்த 3,4 டேபிள் ஆட்கள் சாப்பிட்டுவிட்டு போய் விட்டனர்.ஆனால் முதல் டேபிளில் இருந்த நாங்கள் 3 பேர் மட்டும் (நான். ரவி, பீர்)எந்திரிக்கவே இல்லை.
ஒரு வழியாக 12வது தோசை முடிந்தது.நங்கள் ரெம்ப நேரம் சாப்பிடுவதை பொறாமையாக பார்த்து கொண்டிருந்த புல்லுருவிகள் சிலர் தவசி, ரவி, தவசி, ரவி என்று கத்த ஆரம்பித்தார்கள்.
சரி போன போகுது என்று நானும் ரவியும் எழுந்து விட்டோம்.,எங்களது 12வது தோசை முடிவில். அதுக்கு மேல முடில.

ஆனா கொய்யால, பீர் 15 தோசைக்கு மேல சாப்பிட்டுவிட்டு ஏதும் தெரியாத மாதிரி இன்னும் உக்கார்ந்து இருந்தான் அடுத்த தோசைக்காக..

வாழ்வில் இதுவரை அதிகமா தோசை சாப்பிட்டது அன்று தான்..

இரவு முழுதும் தூங்காதது + காலையில் அதிகமா சாப்பிட்டதால் அன்று முழுதும் ஒரு மாதிரியாகவே இருந்தது.. அன்று முழுதும் பகல் + இரவு தூங்கிய பின்பு தான் சரியானது. ஆகா மொத்தம் ஒரு நாள் முழுதும் வேஸ்ட் - 12 ஸ்பெசல் தோசைக்காக..

கலக்கல் காலேஜ் டேஸ்.

2 கருத்துகள்: