6 மே, 2013

அட போங்கடா...


கேடி பில்லா  கில்லாடி ரங்கா...  

5  மாதங்களுக்கு முன்பு டெல்லி சம்பவம் [ பேருந்தில் மாணவி] நடந்த பின்பு அது தொடர்பான செய்திகள் பற்றி அலுவலகத்தில் பேசி கொண்டிருக்கும் போது ஒருவர் சொன்னார், " இதே மாதிரி சுமார் 30 வருடங்களுக்கு முன்பு டெல்லியில் ஒரு சம்பவம் நடந்தது,

இரண்டு பேர் சேர்ந்து ஒரு பையனையும், பெண்ணையும்  கடத்தி சென்று பெண்ணை பாழ்படுத்தி  கொன்று விட்டனர்.அந்த பெண்ணின் தந்தை ஒரு மிலிடரி ஆபீசர்.பிறகு குற்றவாளிகளை  கண்டு பிடித்து அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்து விட்டனர்.

குற்றவாளிகள் பெயர்  "பில்லா & ரங்கா "

இந்த சம்பவத்திற்கு  பிறகு தான் ரஜினி நடித்த பில்லா படம் வந்தது.அந்த குற்றவாளியின் பெயரை கொண்டு என்றார்..

நான் அதை அப்போது  பெரிதாக கண்டு கொள்ள வில்லை...

இன்று " கேடி பில்லா & கில்லாடி ரங்கா " என்று புதிய படம் தொடர்பான விளம்பரம் கண்ட போது அன்று அவர் சொன்னது மனதிற்கு வந்தது.


அது பற்றி இணையத்தில்  தேடும் பொது  கிடைத்த  தகவல்கள் இந்த சுட்டியில் 

http://en.wikipedia.org/wiki/Geeta_and_Sanjay_Chopra_kidnapping_case

"The Geeta and Sanjay Chopra kidnapping case was a notorious crime in New Delhi in 1978. Two children, Geeta and Sanjay Chopra, were kidnapped by two young men, Ranga Khus (Kuljeet Singh) and Billa (Jasbir Singh), who planned to demand ransom from their parents. On finding that their father was a naval officer, they dropped the idea. To eliminate evidence, they subsequently murdered Sanjay, raped Geeta and then killed her as well. They then fled the city.[1] They were arrested on a train a few months later, tried and hanged for the crime in 1982.[2]"


மனதில் தோன்றிய சில கேள்விகள்...

எப்படி  இது போன்ற கேவலமான குற்றவாளியின் பெயரை தனது கதாபாத்திரம் & படத்தின் பெயராக வைத்து படம் எடுக்க அன்று உள்ளவர்களுக்கு  [நடிகர் & தயாரிபாளர்] தோன்றியது..?? 

வெறும் பப்ளிசிட்டி'காகவா?

சிவாஜி படத்தில் கூட ஒரு பாடலில் "பில்லா ரங்கா பாட்சா  தான்இவன் பிஸ்டல் பேசும் பேஸதான் " என்று ஒரு வரி கூட வரும்.

இன்று கூட ஒரு  புதிய திரைபடம் கூட இதே குற்றவாளிகள் பெயரில்...


நம்மையும் அறியாமல்  இரு பொறுக்கிகளை  ஏதோ ஹீரோக்கள்  ரேஞ்சுக்கு  உயர்த்திய நம்மவர்களை என்ன சொல்ல....

:-(

25 ஜூலை, 2012

கலக்கல் காலேஜ் டேஸ்


கலக்கல் காலேஜ் டேஸ்..
2003 ,, 3rd Semster Study Holidays
NEC - Hostel -01 Room No 107
பொதுவாக எங்கள் ஆஸ்டல் மெஸ்ஸில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை காலை உணவாக தோசை இருக்கும்.
அதிலும் சனிகிழமை  காலை ஸ்பெசல் தோசை (கொஞ்சம் மொருமொருவென்று இருக்கும்) + மதியம் பிரியாணி வேற..
சனிக்கிழமை பெரும்பாலும் கல்லூரி இல்லாத காரணத்தினால் வெள்ளிகிழமை இரவு தூங்க நெடுநேரம் ஆகிவிடும்.
சனி கிழமை காலை தோசை என்பதால் கொஞ்சம் லேட்டா மெஸ்க்கு போனால் வெகுநேரம் காத்திருக்க வேண்டி இருக்கும்,
ஸ்பெசல் தோசை என்பதால் சுடுவதற்கு சற்று நேரம் ஆகும்.
சாப்பிடுற நம்ம மக்களோ அவ்ளோ சீக்கிரம் எந்திரிக்க மாட்டாங்க..
மினிமம் ஒரு அல்லது இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

நேரம் ஆக ஆக தோசையின் சைஸ் சுருங்கி கொண்டே வரும்..
10 மணிக்கு மேல் அது கல் தோசையாக மாறி விடும்..

கமிங் டு தி பாயின்ட் யுவர் ஆனார்..

அது மூணாவது செமஸ்டர் பரீட்சைக்கான "Study Holidays"..

இரண்டு மூன்று வாரங்கள் ஆஸ்டலில் படிப்பது (படிப்பதாய் நடிப்பது ) மட்டுமே வேலை.
பகல் நேரங்களில் சாப்பிடுவது, தூங்குவது என்று இருந்து விட்டு, இரவு நேரங்களில் மட்டும் சிறிதாய் படிப்போம்.
அதுவும் பல நேரங்களில் அரட்டைகளில் கடந்துவிடும்.

அது ஒரு சரித்திர புகழ் வாய்ந்த வெள்ளிகிழமை இரவு.

நானும் Sweety ரவியும் அன்று இரவு நெடு நேரம் வரண்டாவில் அமர்ந்து படித்து கொண்டிருந்தோம். இடை இடையே பேச்சுகளுடன்..

மணி இரண்டானது...ஆஸ்டலில் எல்லோரும் தூங்கி விட்டனர்.
எங்களுக்கும் தூக்கம் வந்துவிட்டது.
தூங்கலாம் என்ற போது திடிரென ஒரு எண்ணம் உதயமானது..

நான் ரவியிடம்,

" விடிவதற்கு இன்னும் 4 மணி நேரம் தான் இருக்கு.
நாளைக்கு சனி கிழமை, ஸ்பெசல் தோசை வேற,எப்டியும் நாம எந்திரிக்க எட்டு மணி ஆயிடும். அப்போ மெஸ்க்கு போன கூட்டம் அதிகமா இருக்கும். சாப்பிட கொறஞ்சது ஒன்றை மணி நேரமாவது வெயிட் பண்ணனும். சாப்பிட்டு வெளில வர 10 மணி ஆயிடும்,அப்டின மதியம் பிரியாணி நல்ல சாப்பிட முடியாது,அதனால இன்னும் ஒரு 4 மணி நேரம் அப்பிடியே படிச்சுட்டு ஆறு மணிக்கு நேர மெஸ் க்கு போன சூடா ஸ்பெசல் தோசை சாப்பிட்டுவிட்டு வந்து தூங்கிறலாம்.. அப்புறம் 12 மணிக்கு போய் பிரியாணி சாப்பிட வசதியா இருக்கும். நீ என்ன சொல்ற?

மூச்சு விடாமல் நான் பேசியதை அமைதியாக கேட்டு கொண்டிருந்த ரவி, பேசி முடித்ததும் என்னை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தான் (கொஞ்சம் கேவலமா பார்வை அது)
உடனே சிரித்து கொண்டே, "சூப்பர் யோசனை டா, சூடா ஸ்பெசல் தோசை சாப்பிட்டு விட்டு, அப்புறமா ரெஸ்ட் எடுத்திட்டு மதியம் பிரியாணிய ஒரு வெட்டு வெட்டலாம் என்று ஆர்கிமிடிஸ் தனது தத்துவத்தை கண்ட போது கொண்ட அதே குதுகலத்துடன் சொன்னான்.


அப்புறம் என்ன ஒரு இரண்டு மணிநேரம் கொஞ்சம் படித்து விட்டு, அஞ்சு மணிக்கு பல் துலக்கி + மேற்படி சமாச்சரங்களை முடித்து விட்டு, சரியாக ஆறு மணிக்கு மெஸ் கதவை தட்டினோம்..

மெஸ் பாய் வந்து கதவை திறந்தான்.
எங்களை ஏற இறங்க பார்த்து விட்டு, என்ன சார் என்றான்,
தோசை ரெடியா டா.. என்றோம்.

ஒரு மாதிரி பார்த்து விட்டு, இப்ப தான் கல்லை அடுப்புல வைச்சுருக்கு.. டீ வேணா குடிங்க.. என்று சொல்லி உள்ளே சென்றான்.

இதற்கு இடையில் மெஸ் கதவு திறந்ததும், ஒரு ஜீவன் வேகமா வந்து எங்களுடன் சேர்ந்தது. யாருன்னு பார்த்தா நம்ம பீர் முகமது.. (நம்ம மாதிரி ஊருக்குள்ள கொள்ள பேரு இருப்பான் போல)

ஆச்சு.. நாங்க மூணு பேரும் மொத டேபிளில் உகார்ந்தோம்..

6.15 A.m,
முதல் 3 தோசை சும்மா முறுகல, சூடா, கும்முன்னு வந்துச்சு.. தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, பாசி பாருப்பு சம்பார்.
நானும் ரவியும் வெளுத்து கட்ட ஆரம்பித்தோம்.
மூன்று, ஐந்து, எட்டு....

இதற்குள் மணி 7 ஆனது.. மெஸ் நிரம்பி விட்டது.. எங்களுக்கு பின் வந்த 3,4 டேபிள் ஆட்கள் சாப்பிட்டுவிட்டு போய் விட்டனர்.ஆனால் முதல் டேபிளில் இருந்த நாங்கள் 3 பேர் மட்டும் (நான். ரவி, பீர்)எந்திரிக்கவே இல்லை.
ஒரு வழியாக 12வது தோசை முடிந்தது.நங்கள் ரெம்ப நேரம் சாப்பிடுவதை பொறாமையாக பார்த்து கொண்டிருந்த புல்லுருவிகள் சிலர் தவசி, ரவி, தவசி, ரவி என்று கத்த ஆரம்பித்தார்கள்.
சரி போன போகுது என்று நானும் ரவியும் எழுந்து விட்டோம்.,எங்களது 12வது தோசை முடிவில். அதுக்கு மேல முடில.

ஆனா கொய்யால, பீர் 15 தோசைக்கு மேல சாப்பிட்டுவிட்டு ஏதும் தெரியாத மாதிரி இன்னும் உக்கார்ந்து இருந்தான் அடுத்த தோசைக்காக..

வாழ்வில் இதுவரை அதிகமா தோசை சாப்பிட்டது அன்று தான்..

இரவு முழுதும் தூங்காதது + காலையில் அதிகமா சாப்பிட்டதால் அன்று முழுதும் ஒரு மாதிரியாகவே இருந்தது.. அன்று முழுதும் பகல் + இரவு தூங்கிய பின்பு தான் சரியானது. ஆகா மொத்தம் ஒரு நாள் முழுதும் வேஸ்ட் - 12 ஸ்பெசல் தோசைக்காக..

கலக்கல் காலேஜ் டேஸ்.

26 மார்ச், 2011

ஊடல் நிமித்தம்

உன் மௌனம் அழகுதான் 
உன் கோபம் அதை விட அழகுதான்..
அதற்காக
 நீ பேசாமல் சிரிக்காமல் இருந்து விடாதே...
             
நீ பேசும் போதும் 
சிரிக்கும் போதும்
பேரழகாய் அல்லவா இருக்கிறாய்...



-----------------------------------------------------------------------------------------------------------------



மழை போல் பொழியும் 
என் காதலை 

மிக நளினமாய் சிதறடிக்கிறாய்

உன் மௌன குடையினால்...


                            


-------------------------------------------




ஊடல் நிமித்தம்1

எது அழகு என்றேன்..?

நிலா,
மழை,
மேகம்,
வானம்,
கடல்,
காதல்,
குழந்தைகள்  
என அடுக்கி கொண்டே போனார்கள் என் நண்பர்கள்..

ஓ..

இவர்கள் யாரும் அவள் சூடிய ஒற்றை ரோஜா'வை பார்த்தது இல்லையோ..?














22 மார்ச், 2011

சாதீ... தீ யின் வடுக்கள்

சாதியின் அடையாளம் எந்த வடிவங்களில் இருந்தாலும் ஏற்றுகொள்ள முடியாதது..
ஒரு மனிதனை அவனது சாதியினை வைத்து அடையாளம் காட்ட கூடாது..
சாதியின் கட்டமைப்பில் மேன்மையில் உள்ளதாக கூறும் மக்களையும் சரி, தாழ்த்த பட்டதாக கூறப்படும் மக்களையும் சரி விளையடுக்காக கூட சாதியின் அடையாளத்தை கொண்டு குறிப்பிட கூடாது.. 

///  அந்த பெண்  மிகவும் sportive,, எட்டாம் வகுப்பு படிப்பவள்  ..இந்த சிறு வயதில் சிந்தனைகளில்,செய்கைகளில் குறும்பும்,அழகான அறிவுதன்மையும்  ஒருங்கே மிளிரும்.படிப்பு மட்டும் அல்லாது எக்ஸ்ட்ரா curricular activities லும் மிகவும் ஆரவமுடன் பங்கேற்கும்.. அவள் அவளுடைய நண்பர்கள் வட்டத்தின் ராணி.. போன வாரம் ஒரு மாலை பொழுது..வழக்கமான உற்சாகம் மிஸ்ஸிங்.. 
                          என்ன ஆச்சு பிரியா..? 
                           "அண்ணா நான் பயங்கர mood outல இருக்கேன் . எங்க மிஸ் என மத்த வங்களுக்கு முன்னாடி insult பண்ணிட்டாங்க.. என்னோட caste / religion பத்தி சொல்லி என்னை குறிப்பிட்டாங்க..  எனக்கு ஒரு மாதிரி இருக்கு... அழுதுருவேன்'னு நினைக்கிறன்.. அழுகையா வருது ..கோவம் கோவம்á வருது. ஏன் என்ன மட்டும் அப்பிடி  சொல்றாங்க..?   
                              இத்தனைக்கும் அவள் படிக்கும் பள்ளிக்கூடம் அந்த சிட்டி'ல பெரிய பள்ளிகளில் ஒன்று- ஆங்கில வழி கல்வி கூடம்... ஒருவழியாக சமாதானம் ஆனாள்.. ஆனால் அந்த வடு கண்டிப்பா இருக்கும்..
                       ஏன் அந்த ஆசிரியருக்கு தோன்ற வில்லை,சாதியின் அடையாளங்களை வைத்து மற்றவர்களை குறிபிடுவது தவறு என்று..?
                         
கல்லுரி நாட்களில் உடனிருந்த நண்பனை நாங்கள் சாதியின் பெயராலே குறிப்பிடுவோம்.. ஐயர் என்று.. அவனும் மறுதலிப்பது இல்லை..
ஒரு வேலை அந்த சூழ்நிலையில் அவன் மைனாரிட்டி என்பதால் நாங்கள் எங்களது மெஜாரிட்டி மனப்பான்மையை அவனிடத்து காட்டினோமோ என்று என்ன தோன்றுகிறது. உடன் படிக்கும் பிராமின் பெண்ணை மாமி என்று கிண்டல் அடித்தோம் .. அந்த இனத்தின் மீதான வன்மம் இப்படியாக வெளிப்பட்டதோ..? வெளிபடுகிறதோ ..?
                               அது ஏன் ஒரு நாடார் பையனை , செட்டியார் பொண்ணை நாம் ஜாதி சொல்லி அழைப்பது இல்லை? எல்லாவிடங்களிலும் மாமி என்றும் ஐயரு என்றும் மிக எளிதாக அந்த சமுக சேர்ந்தவர்களை மட்டும் குறிப்பிடு கிறோமே ஏன்..??  //


// சாதியின் அடையாளத்தை கொண்டு குறிபிட்டால் வருந்தும் சிலர் ஒரு பக்கம்..
ஆனால் சாதியினை தன்னுடைய அடையாளமாய் காட்டுவதில் பெருமிதம் கொள்ளும் சிலர் ஒரு pakkam.
                     எங்கள் கல்லூரிக்கு ஒரு முறை ஒரு ------- பிள்ளை (இந்திய விண்வெளி ஆராய்சியில் பெரிய ஆளு )   அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்க வந்திருந்தார்கள் ..ஆடிடோரியத்தில் அனைத்து மாணவர்களும் குழுமியிருந்தோம்.. மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு (ஆங்கிலம்..)அவர் பதில் அளித்து கொண்டிருந்தார்..
                               நமக்கும்  ஆங்கிலத்துக்கும் ரெம்ப தூரம் ..(செம் மொழி கொண்டான்). பக்கதுல இருந்த ஷேக் கிட்ட "நாம எபோ நிலவுல கால எடுத்து வைப்போம்" இத எப்டி டா இங்கிலிஷ்ல கேக்குறது;னு கேட்டு, அவன் சொன்னத மனப்பாடம் பண்ணி நான் எந்திரிகறது குள்ள ஒரு தம்பி பயபுள்ள எந்திரிச்சு கேட்ருச்சு..                                                                              
                                 கொஞ்ச நேரம் கழிச்சு தான் மூளை'ல spark அடிச்சது.. மறுபடியும் ஷேக் கிட்ட "மச்சான் அவர் கிட்ட,  ____  ங்கிறது உங்க பேரு. அதூ என்ன சார் பிள்ளை'னு கடைசில..? நாட்டின் உயர்ந்த பதவில இருக்குற நீங்க இப்டி சாதிய அடையலாம வசுகிட்ட மத்தவங்க எப்டி சார் சாதிய மறப்பாங்க.."
இத  இங்கிலீஷ்'ல சொல்லிதா டா.. நான் கேக்குறேன் என்றேன்.
                                 அப்டியே முறைத்து பார்த்தவன் ,உனக்கு இன்டெர்னல் மார்க்ஸ் வேணும்á  இல்ல டிகிரி முடிக்காம அலைய போறிய.. உன் புரட்சி பேச்செல்லாம் வேற எங்கயாச்சும் வச்சுக்கோ என்று சொல்லி உடனே அவ்விடத்தை விட்டு அழைத்து சென்றான்..  //


ஆதிக்க சமுகம் மட்டுமா சாதியின் அடையாளத்தை பெயரில் வெளிபடுத்தும். நாங்களும் கூட என்று  ஒடுக்க பட்ட மக்களும் அடையாளங்களை வெளிப்படுத்தி யது உண்டு..


//   நான் வியந்து பல முறை பார்த்த பெயர் "தலித் எழில் மலை "  (அவரே தான் பா ம க முன்னாள் எம் பி / அமைச்சர் ..)எப்டி இவரால் தைரியமாக தன்னுடைய அடையாளத்தை வெளி காட்ட முடிகிறது...?
                                 அய்யாசாமி பிள்ளை, ராமசாமிஉடையார்  என்று சொல்பவர்கள் "தலித் முருகன், என்று சொல்லும் போது மனதில் உறுத்தல் இல்லாமல் இருக்காது.நம் சமூகம்  அப்டித்தான் உருவாக்கி வைத்திருக்கிறது. இன்று சமுகத்தில் ஒடுக பட்ட மக்கள் தங்களின் சாத்திய அடையாளத்தை மற்ற மக்களின் முன்னால் வெளிபடுத்த தயங்கு கின்றனர்  என்பதே உண்மை.ஒடுக்க பட்ட மக்களில் எதனை பேர் தனது சதியை பெயருக்கு பின்னல் / முன்னால் சேர்க்க விரும்புகின்றனர்..?/


* சாதியின் அடையாளம் கொண்டு வெளிபடுத்த ஒடுக்கப்பட்ட மக்களும் விரும்ப வில்லை . சமுகத்தில் உயர்ந்த இனம் என்று குறிப்பிட படும் இனமாக இருந்தாலும் தம்மை சாதியின் அடையாளம் வழி குறிப்பிட படுவதையும் சிலர் விரும்புவது இல்லை.


கீழே முகிலன் அவர்கள் எழுதிய வடு .. இந்த வடு சாதியை விரும்பாத எல்லோருக்குமாக..
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6509:2009-12-05-08-28-49&catid=148:2008-07-29-15-48-04